உதட்டுக்கு பதில் ஆணுறுப்பில் ஆபரேஷன்.. டாக்டர் மீது வழக்கு
சென்னையில் வாய்ப்புண் சிகிச்சைக்கு சென்ற சிறுவனுக்கு சுன்னத் செய்த டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து ஐஸ்ஹவுஸில் உள்ள ஹாஸ்பிடலின் ஆபரேஷன் அறைக்கும், ஆய்வகத்துக்கும் சீல் வைத்தனர். இந்நிலையில் சுன்னத் ஆபரேஷன் செய்த டாக்டர் முகமது உவைசி மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.





