மாயா பஜார் படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ள சுந்தர்.சி…!
கன்னடத்தில் வெளிவந்த மாயா பஜார் படத்தை இயக்குனர் சுந்தர் சி தமிழில் ரீமேக் செய்ய உள்ளார். விஷால் நடிப்பில் அவர் இயக்கிய ஆக்சன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்க உள்ளது. இந்நிலையில் கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த மாயாபஜார் படத்தின் ரீமேக் உரிமையை பெற்றுள்ள சுந்தர் சி அவரே இயக்கவும் முடிவு செய்துள்ளார். டிசம்பர் மாதம் இந்த படத்தின் வேலைகள் தொடங்க உள்ளன.







