--- --:--:-- --

ஒகேனக்கல்லுக்கு திடீரென அதிகரித்த நீர்வரத்து..!

5

மிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் சமயத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம் கடந்த முறை தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது அணைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீர் ஆற்றல் வெளியேற்றப்பட்டது.

 

அதனால் காவிரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக தடை விதிக்கப்பட்டது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது அதனால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகின்றது.

 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருவதினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றது தமிழக நீர் பிடிப்பு பகுதிகளாக உள்ள கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்வதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Right Menu Icon