தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திடீர் உயர்வு..!
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உபயோக சமையல் எரிவாயு மற்றும் வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது.
610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு 50 ரூபாய் உயர்ந்து தற்போது 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விலை 62 ரூபாய் அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு பின் வர்த்தக சிலிண்டரின் விலை 1293 ரூபாய்க்கு விற்பனையாகிறது.







