திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது..!
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்சியின் பொது செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் காலை 10 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் இதில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.






