--- --:--:-- --

ஆந்திராவில் திடீர் மர்ம நோய்..! ரத்தத்தில் அதிகளவு நிக்கல் கலந்ததே காரணம்..!

2

ந்திராவில் ஏலூர் பகுதியில் மர்ம நோயால் மக்கள் பாதிக்கப்பட்டவருக்கு தண்ணீரில் அதிக அளவு கலந்து இருந்த குளோரின், கிருமினாசினியும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

ஏலூர்வில் திடீரென மர்ம நோய் தாக்கியதில் 550 க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை சோதனை செய்தபோது நோயாளிகளின் ரத்தத்தில் இ‌எம் மற்றும் நிக்கல் அதிகமாக இருந்ததாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளின் போது தண்ணீரில் குளோரின் பொடி அதிகமாக கலந்து இருக்கலாம் என்றும், சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி இணைந்து அந்த பகுதி நீரை மாசுபடுத்தி இருக்கலாம் என ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon