--- --:--:-- --

சீரம் மற்றும் பயோடெக் தடுப்பூசியில் குறைபாடு உள்ளதா..!

3

சீரம் மற்றும் பயோடெக் தடுப்பூசி குறைபாடு உள்ளதால் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் பைசர் மற்றும் சீரம், பயோடெக் வர்த்தக நிறுவனங்கள், தங்கள் தடுப்பூசி அவசரகால பயன்பாடுகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த நிறுவனங்களின் விண்ணப்பங்கள் மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பு பரிசீலித்து வருகிறது.

 

இந்த நிலையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசிகள் போதிய பாதுகாப்பு இல்லாமை மற்றும் செயல்திறன் குறைபாட்டின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்று தகவல் பரவியது.

 

ஆனால் சீரம் மற்றும் பாரத் பயோடெக் தடுப்பூசியின் குறைபாடு உள்ளதால் ஒப்புதல் கிடைக்கவில்லை என்ற தகவல் உண்மையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி தொடர்பாக வெளியான செய்திகள் போலியானது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon