--- --:--:-- --

சர்வமத பிரார்த்தனை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!

1

புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு நடத்த சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சர்வமத பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கு மத்தியில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் சென்றார்.

 

அப்போது அருட்தந்தை பிரபாகர் முதலமைச்சரை வரவேற்றார். பின்னர் பேராலயத்தில் பிரார்த்தனை செய்த முதலமைச்சருக்கு அருட்தந்தை நினைவு பரிசு வழங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவதாக நாகூர் தர்காவிற்கு சென்று வழிபட்டுள்ளார்.

 

சேதமடைந்து காணப்படும் தர்கா குலத்தின் சுற்றுச்சுவர் பகுதியை அவர் பார்வையிட்டார். பின் தர்காவுக்கு சென்ற அவருக்கு நாகூர் ஆண்டவர் கலிஃபா மஸ்தான் சார்பில் வரவேற்பு அளித்தார். பின்னர் முதலமைச்சர் தர்காவில் உள்ள மலர் போர்வையை தொட்டு வணங்கினார்.

 

தொடர்ந்து பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தியவர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்திற்கு சென்று அங்கு மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஆதீனம், மாசிலாமணி, தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியவிடம் ஆசிபெற்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

 

ஆய்வுப் பணியின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட சர்வமத பிரார்த்தனையில் அமைச்சர் எஸ் பி வேலுமணி, ஓ எஸ் மணியன், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர்.

Leave a Reply

Right Menu Icon