விசைப்படகு கட்டுமான பணியின் போது திடீர் தீ விபத்து..!
காரைக்கால் துறைமுகத்தில் விசைப்பலகை கட்டுமான பணியின் பொழுது திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் மீன்பிடி துறைமுகத்தின் அருகே விசைப்படகுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மீனவரின் விசைப்பலகை கட்டுமான பணி 50% முடிவடைந்த நிலையில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





