மதுரையில் கால்வாயில் திடீர் உடைப்பு.. ஊருக்குள் புகுந்த வெள்ளம்..!
மதுரை மாவட்டத்தின் கரை பகுதியில் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் 200க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வடிவேல் கரைப்பகுதியில் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு 200க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். பாசன கால்வாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பதாக பகுதியினர் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.





