அடுக்குமாடி குடியிருப்பு அறையில் பூட்டிக்கொண்டு தவித்த குழந்தை..!
அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் உள்ள அறைக்குள் தவறுதலாக பூட்டிக்கொண்டு சிக்கிய குழந்தையை தீயணைப்பு வீரர்கள் வெற்றிகரமாக மீட்டுனர்.
கர்நாடக மாநில மங்களூரில் உள்ள பகுதியை சேர்ந்த குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள அறைக்குள் தவறுதலாக மூன்று வயது குழந்தை பூட்டிக் கொண்டது. பெற்றோர்கள் பல முயற்சிகள் மேற்கொண்டும் கதவை திறக்க முடியவில்லை.
பின் உதவிக்காக பாண்டீஸ்வரர் தீயணைப்பு சேவை அவசரமாக தொடர்பு கொண்டார். பின்னர் தீயணைப்பு குழு விரைந்து சென்று கயிறுகளை பயன்படுத்தி நான்காவது மாடியில் இருந்து குழந்தையை வெற்றிகரமாக மீட்டது. இதனால் குழந்தையின் பெற்றோருக்கு தீயணைப்பு துறையினருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.





