--- --:--:-- --

கர்ப்பிணிக்கு நாட்டு வைத்திய முறையில் நடந்த பிரசவம்!

13

கடலூரில் கொரொனா முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கர்ப்பிணிக்கு நாட்டு வைத்திய முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது. கெடிலம் ஆற்றின் கரையோரத்தில் குடிசை அமைத்து தங்கியிருந்த 40 பேர் கொரொனா உத்தரவையடுத்து மாவட்ட நகராட்சி பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் லதா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

ஆனால் மருத்துவமனை சிகிச்சை வேண்டாம் எனக் கூறிய லதா நாட்டு வைத்தியத்தில் ஏற்ற பிரசவம் பார்த்துக்கொள்வதாக மீண்டும் முகாமிற்கு திரும்பியுள்ளார். லதாவின் உறவினரே அவருக்கு பிரசவம் பார்த்தனர். நாட்டு வைத்திய முறையில் அதாவது பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து லதாவுக்கும் அவரது கணவருக்கும் எடுத்து கூறப்பட்டதை அடுத்து தற்போது தாயும் சேயும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave a Reply

Right Menu Icon