--- --:--:-- --

ஒன் சைட் லவ்..! மறுப்பு தெரிவித்ததால் ஆபாசமாக சித்தரித்து பெண்ணிற்கு மிரட்டல்

12

கல்லூரியில் தன்னுடன் படித்த பெண்ணின் புகைப்படத்தை இணையத்தில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பொறியியல் பட்டதாரி போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்தவர் இந்த நவீன் 28 வயதான இவர் சிக்கியது எப்படி ?

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் 2011 ஆம் ஆண்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்தார். அப்போது அதே கல்லூரியில் நீலகிரி மாவட்டம் ஒட்டுபட்டரை கிராமத்தை சேர்ந்த நவீன் என்ற இளைஞரும் பொறியியல் படித்து உள்ளார். அப்போது நவீனுக்கும், அந்த இளம் பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் படிப்பை முடித்த இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

 

கல்லூரி முடிந்ததும் நண்பர்கள் வாட்ஸ்அப் குரூப் மூலமாக இளம் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய நவீன் அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்துள்ளார்.
தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று அந்தப் பெண் எச்சரித்தும் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமாக தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் நவீன் அந்தப் பெண்ணை காதலிப்பதாக தெரிவித்து தன்னை காதலிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாக தெரிகிறது.

 

அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்து நவீனின் தொடர்புகளை சில நாட்களாக தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார் நவீன். இந்நிலையில் திடீரென ஒருநாள் இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து அந்தப்பெண்ணின் வாட்ஸ்அப் க்கு அனுப்பியுள்ளார் நவீன். மேலும் தன் ஆசைக்கு இணங்கவில்லை என்றால் ஆபாச புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

 

அதிர்ச்சி அடைந்த இளம் பெண் பெற்றோர் மூலம் புதுக்கோட்டை வடகாடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் புதுக்கோட்டை வடகாடு போலீசார் நீலகிரி சென்று நவீனை கைது செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon