சென்னையில் இன்று புறநகர் மின்சார ரயில்கள் ரத்து..!
சென்னையின் முக்கிய வழித்தடத்தில் இன்று 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை சென்ட்ரலில் இருந்து கூடூர் இடையே பொறியியல் பணி நடைபெற்று வருகிறது. இதனால், இன்று (07.09.2025) 11 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று மாலை 6.45, இரவு 8 மற்றும் 9.20க்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 7.35, 11.20 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும், மறு மார்க்கத்தில் இருந்து இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரைக்குச் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தாம்பரம் தற்போதைய புறநகர் மற்றும் மின்சார ரயில்களின் முக்கிய மையமாக மாறியுள்ளது. தாம்பரத்தில் இருந்து இரு மார்க்கமாகவும் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக, ஜூன் 21 முதல் ஆகஸ்ட் 18 வரை வார நாட்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 8.15, 9.25 மற்றும் 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
சூலூர்பேட்டையில் இருந்து இரவு 8.35 மணிக்கு சென்ட்ரல் செல்லும் ரயில் ரத்தாகிறது. ரத்து செய்யப்பட்டுள்ள புறநகர் ரயில்களுக்கு பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.





