வகுப்பறையை அடித்து நொறுக்கிய மாணவர்கள்..!
வேலூர் அடுத்த தொரப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பறை பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் ஏறத்தாழ 800 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் வகுப்புகள் முடிந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது.
இதனிடையே சக மாணவர்கள் செல்லும் வரை காத்திருந்த சில மாணவர்கள் இரும்பு மேஜைகளை உடைத்து நாசம் செய்த புகாரின் பேரில் போலீசார் வந்ததை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.





