தலித் பெண் சமைத்த உணவை சாப்பிட மாட்டோம் எனக்கூறிய மாணவர்கள்..!
தலித் பெண்ணின் கையால் சமைத்த உணவை அரசு பள்ளி மாணவர்கள் சாப்பிட மறுத்ததால் உடனடியாக உயர் அதிகாரிகள் அந்த பெண்ணை பணிநீக்கம் செய்த சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்த சாதி பாகுபாடு நடைபெற்றுள்ளது.
உயர் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சத்துணவு பெண் பணிக்கு அமர்த்தப்பட்டதால் வழக்கம்போல மாணவர்கள் மதிய உணவு சாப்பிட தொடங்கினர். இந்த சம்பவத்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலும் இழிவுபடுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





