--- --:--:-- --

பார்வையற்ற ஆசிரியர் முன் கேலி கிண்டலுடன் மாணவர்கள் ஆட்டம்..!

11

நாமக்கல் அருகே பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் பொழுது பாடத்தை கவனிக்காமல் மாணவர்கள் கேலி கிண்டலுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அக்காலத்தில் நெடு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது.

 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பன்னீர். பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் வரலாற்றுப் பாடம் நடத்திக் கொண்டிருந்த பொழுது குறிப்பிட்ட வகுப்பில் படிக்கும் மாணவர்கள் சிலர் சேட்டையில் இறங்கியுள்ளனர்.

 

ஆசிரியருக்கு பார்வை இல்லை என்பதால் சத்தமில்லாமல் உடல் அசைவுகளை வெளிப்படுத்தி கேலி கிண்டல் செய்து அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் பின்னணியில் பாடலை சேர்த்து டிக் டாக் போல எடிட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.

 

இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் குணசேகரன் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து கண்டிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon