--- --:--:-- --

கொரொனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம்..!

10

கொரொனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க மாநில அரசுகளுக்கு 7,224 கோடி ரூபாயை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

 

கொரொனா தொற்றால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஏதுவாக மத்திய அரசின் பங்காக 7 ஆயிரத்து 224 கோடி ரூபாயை மாநில பேரிடருக்கு விடுவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

 

ஏற்கனவே 5 மாநிலங்களில் இரண்டாம் தவணையாக 1,599 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போது 23 மாநிலங்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதால் ஏற்படக்கூடிய செலவுகளை எதிர்கொள்ள மாநில அரசுகளுக்கு இந்த நிதி உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon