--- --:--:-- --

பள்ளியில் ரீல்ஸ் செய்யும் மாணவிகள்..!

7

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் என்ற பெயரில் தவறான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு லாஸ்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மது அருந்தியதாக புகார் எழுந்தது.

 

பின்னர் கல்வித்துறை அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டு மது அருந்திய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் அதே பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள் வகுப்பறையில் பட்டாக்கத்தியோடு போஸ் கொடுப்பது போலவும், பின்னணியில் கானா பாடல் ஒலிப்பது போலவும் பதிவிட்டுள்ளனர்.

 

புதுச்சேரி நெல்லித்தோப்பு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் இருவர் சினிமா பாடலுக்கு நடனமாடிய ரியல் செய்யும் வீடியோவும் தற்பொழுது வாயிலாக பரவி வருகிறது. படிக்கும் வயதில் அதுவும் வகுப்பறையிலேயே மாணவர்கள் இது போன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது காண்போரை வருத்தம் அடைய செய்துள்ளது.

 

மேலும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு பள்ளிகளில் செல்போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும் என்பதை அனைவரும் கருத்தாக உள்ளது.

 

Right Menu Icon