--- --:--:-- --

பாதாள சாக்கடையில் உடைப்பு..கழிவு நீர் வெளியேறுவதால் நோய் பரவும் அபாயம்..!

8

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தின் எட்டாவது வார்டில் பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் அதிக அளவில் வெளியேறி வருகிறது.

 

ஒரு வாரத்திற்கு மேலாக கழிவு நீர் வெளியேறி வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் நான்கு முறை சந்திப்பில் கழிவுநீர் ஓடுவதால் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். வெளியேறுவதை தடுக்க நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Right Menu Icon