புத்தகத் திருவிழாவில் சாமி ஆடிய மாணவிகள்..!
மதுரை புத்தகத் திருவிழா கண்காட்சி தொடங்கியது. இதனையடுத்து அங்கு சென்ற பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது பக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்ட நிலையில் திடீரென மேடைக்கு கீழே அமர்ந்திருந்த மாணவிகள் சாமியாட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல பலரும் நாற்காலிகளை தள்ளிவிட்டு சாமி ஆடினர். சில மாணவிகள் மயங்கி விழுந்த நிலையில் அவர்களுக்கு அருகில் இருந்த பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர். இதனையடுத்து கலை நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





