--- --:--:-- --

கழுத்துப்பகுதியில் டாட்டூ குத்திய பெரம்பலூர் இளைஞர்.. சீல் பிடித்து பலியான பரிதாபம்..!

7

பெரம்பலூரை சேர்ந்தவர் பாரத். 22 வயதான கல்லூரி மாணவரான இவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தனது கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை டாட்டுவாக குத்தியுள்ளார்.

 

இதன் பின்னர் ஊர் திரும்பிய பரத்திற்கு டாட்டுக்குத்திய பகுதியில் புண் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நரம்புகளும் பாதிக்கப்பட்டு நெறி கட்டிக் கொண்டது. தொடர்ந்து அறிவியல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாட்டு குத்தியதால் சீல் பிடித்திருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்தவர்கள் அகற்றினர்.

 

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சையில் தனியார் மருத்துவமனைக்கு பரத்தை அழைத்து சென்றனர். அங்கு பரத்தை பரிசோதித்த மருத்துவர்கள் டாட்டூ குத்தியதால் ஏற்பட்ட உடல் பாதிப்பில் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று கூறியுள்ளனர்.

 

அவருக்கு குறைந்த ரத்த அழுத்தமும் இருந்துள்ளது. இதனால் அவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காது என தெரிவித்துவிட்டனர். தொடர்ந்து பரத் தஞ்சை மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

 

Right Menu Icon