முட்டையில் தலைவர்களின் உருவங்களை வரைந்து மாணவி சாதனை
கோவையை சேர்ந்த கல்லூரி மாணவி குறிப்பிட்ட நேரத்தில் முட்டைகளில் உலக தலைவர்களின் ஓவியங்களை வரைந்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளார்.

முனியம் பாளையத்தை சேர்ந்த மோனிஷா என்பவர் ஒரு மணி நேரம் 32 நிமிடம் 59 வினாடிகளில் மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், அப்துல்கலாம் உள்ளிட்டோரின் உருவங்களை மூட்டைகளில் வரைந்து அசத்தியுள்ளார். இவரது சாதனையை பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.






