இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு கடும் தண்டனை..!
திருப்பூர் அருகே 6 வயதுடைய இரட்டை சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு அறுபத்தி ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சேவூர் பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 வயதுடைய இரட்டை குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் குழந்தைகளுக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் நீதிபதி இருபத்தி ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.





