ஆர்.ஆர்.ஆர் பட சர்ச்சை…ஆலியா விளக்கம்..!
ஆர் ஆர் ஆர் படத்தில் குறைந்த காட்சிகளில் ஆலியா படத்தில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படக்குழு மீது உள்ள அதிருப்தியால் ஆர் ஆர் ஆர் தொடர்பான பதிவுகளை தான் நீக்கி விட்டதாக தகவல் பரவியது. இன்ஸ்டாகிராமில் தற்செயலாக நடந்த விஷயங்களை வைத்து அனுமானத்தின் பேரில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என அனைவரையும் மனதார கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.





