நாளை இரவு கரையை கடக்கிறது மாண்டஸ் புயல்..!
காரைக்காலில் இருந்து 420 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென்கிழக்கு திசையில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலு குறைந்து மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கரையைக் கடக்கும் பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





