இணைய வழி மோசடி பற்றி குளிர்கால கூட்டத்தொடரில் கேள்வி..!
2021 ஜனவரி முதல் 20202 நவம்பர் வரை 8,84,000 இணையவழி ஆன்லைன் நிதி மோசடி சம்பவங்கள் நடந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குழு நிர்வாக கூட்டத்தொடரில் ஆன்லைன் நிதி மோசடி தொடர்பாக உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை பதிலளித்தது.
அதில் 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை 8,84,763 இணையவழி நிதி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றங்களை தடுக்க கூடிய வகையில் 49 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





