ஸ்டாலின் ரோடு ஷோ: மதுரையில் எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம்
முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தரவுள்ளார். அவரது சாலைப் பேரணி மற்றும் சிலை திறப்பு விழா காரணமாக, போக்குவரத்து காவல்துறை சில சாலைகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமங்களைத் தவிர்க்க, இந்த மாற்றங்களை அறிந்து ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சாலைப் பேரணி வழித்தடம்: அவனியாபுரம் மருதுபாண்டியர் சிலையிலிருந்து ஜெயவிலாஸ் சந்திப்பு வரை நடைபெறும் சாலைப் பேரணியின்போது, குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதி இல்லை.தடைசெய்யப்பட்ட பகுதிகள்: பெருங்குடி சந்திப்பு, வில்லாபுரம் ஆர்ச், ஜெயவிலாஸ் சந்திப்பு, ஜெய்ஹிந்துபுரம், சந்தர்ராஜபுரம், மாடக்குளம், பழங்காநத்தம், பைபாஸ் ரோடு, காளவாசல், திண்டுக்கல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது.
நகருக்குள் நுழைய தடை: பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம் வழியாக நகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.





