--- --:--:-- --

சிகிச்சையில் இருக்கும் எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் நேரில் விசாரிப்பு!

5

பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாக, தற்போது மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்.

 

மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, எச்.ராஜாக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு அவரது உடல் நல்ல முறையில் ஒத்துழைக்கிறது. அவர் தற்போது நன்கு குணமடைந்து வருவதாகவும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேசும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருந்தார். எச்.ராஜா விரைவில் முழுமையாகக் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் தனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

 

Right Menu Icon