பட்ஜெட்டிற்கு பிறகு தலைகீழாக சரிந்த தங்கம் விலை..!
புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வருகிறது. சேமிப்பின் அடையாளமாக திகழும் தங்கம் விலை ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்ததால் பலரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த நிலையில் பட்ஜெட்டிற்கு பிறகும், பிப்ரவரி மாத தொடக்கத்திலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் இன்று பிப்ரவரி 2ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு மட்டுமே ரூ.950 குறைந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.800 குறைந்து ஒரு கிராம் ரூ.12,000க்கும், சவரனுக்கு ரூ.6,400 குறைந்து ஒரு சவரன் ரூ.96,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.20,000 குறைந்து ஒரு கிலோ ரூ.3,00,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





