--- --:--:-- --

ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்..!

1

ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முதல் நிதிநிலை அறிக்கை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் முதன்முறையாக பிடிஎஃப் வடிவில் தனது அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒப்படைத்தார்.

 

துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சுமார் 3 மணி நேரம் நிதிநிலை அறிக்கையை வாசித்தார். திருத்திய வரவு செலவு அறிக்கை இந்த நிதி ஆண்டில் ஆறு மாதங்களுக்கு பொருந்தும் எனக் கூறியவர் அனைத்து குடும்பங்களின் பொருளாதார நிலையை அடைவதற்கான தரவுகளைத் திரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என உறுதியளித்த அவர் வல்லுனர்களின் கருத்துக்களைப் பெற்று அரசு உரிய முறையில் செயல்படுத்தும் வழிமுறைகளை முதலமைச்சர் கூறியுள்ளார்.

 

அனைத்து துறைகளில் நடைமுறைகளும் முழுமையாக கணினி மயமாக்கப்படும் எனத் தெரிவித்திருக்கும் அவர் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக கூறினார்.

 

நடப்பு நிதி ஆண்டின் மொத்த வருவாய் 2 லட்சத்து 60 ஆயிரத்து 409 கோடியே 2 லட்சம் ரூபாய் என்றும், அதில் இரண்டு லட்சத்து 61,188 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon