தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு..!
தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
15 மற்றும் 16 தேதிகளில் தமிழ்நாடு புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மிதமான வரையில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






