--- --:--:-- --

திருப்பூருக்கு வருகைதந்த முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு..! மயிரிழையில் உயிர்தப்பிய போலீஸ் கமிஷனர்!!

ghs

கொரோனா தொற்று தடுப்பு, வளர்ச்சி  பணிகள் குறித்து நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று  ஆய்வு கூட்டங்களில் கலந்து கொண்டார்.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் வியாழக்கிழமை கோவை வந்தார். பின்னர் வெள்ளிக்கிழமை காலை கார் மூலம் ஊட்டி சென்றார். அங்கு மாவட்ட எல்லைபகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அரசுத்துறை உயர் அதிகாரிகள் நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் கப்பச்சி வினோத்,அதிமுக பிரமுகர் வரவேற்றனர்.

 

பின்னர் நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகள் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து தேயிலை தொழிற்சங்க பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஆகியோருடன் கலந்துரையாடினார்.

ரூ.200  கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள்

 

தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் ரூ 189.35 கோடி மதிப்பில் முடிவடைந்த 67 திட்ட பணிகளை திறந்து வைத்தார். அதேபோல் 131.57 கோடி மதிப்பிலான  123 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து 4 ஆயிரத்து 198 பயனாளிகளுக்கு சுமார் ரூ.200  கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.

 

இதைத்தொடர்ந்து ஊட்டியில் இருந்து கார் மூலம் மேட்டுப்பாளையம் வந்து மதிய உணவு அருந்தினார். பின்னர் அன்னூர் வழியாக அவிநாசி ஆட்டையாம்பாளையம் வந்தார். அங்கு அவருக்கு கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அருண்குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

பின்னர் அங்கிருந்து அவிநாசிலிங்கம்பாளையத்தில்  திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து தண்ணீர்பந்தல் காலனியிலும்  வரவேற்பு அளிக்கப்பட்டது .

 

சிறப்பான வரவேற்பு

இதனையடுத்து  திருப்பூர், பெரியார் காலனியில் கழக அமைப்பு செயலாளரும், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்,  திருப்பூர் மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலும், குமார் நகரில்  வடக்கு எம்.எல்.ஏ விஜயகுமார் தலைமையிலும், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் தெற்கு எம்.எல்.ஏ குணசேகரன் தலைமையிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் அவிநாசி ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்  ஜெகதீசன் பூண்டி முன்னாள் நகர செயலாளர் விஸ்வநாதன், முன்னாள் மண்டலத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், அ.தி.மு.க நிர்வாகிகள் பட்டுலிங்கம், ஈஸ்வரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து பொக்கே வழங்கியும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் குமார்நகரிலும் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதி உள்பட 12 இடங்களில்  அ.தி.மு.க நிர்வாகிகள் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

போலீசார் விரிவான பாதுகாப்பு

 

முதல் அமைச்சர் வருகையை ஒட்டி போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி போடப்பட்டு இருந்த மேடை மற்றும் அதன் 100 மீட்டர் சுற்று பகுதிகளில் 5 அடிக்கு ஒரு போலீசாரும், மற்ற பகுதிகளில் 25 மீட்டர் தூரத்திற்கு ஒரு போலீசார் நிறுத்திவைக்கப்பட்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். சால்வை, மற்றும் பூச்செண்டுகள் அனைத்துப் மெட்டல் டிடக்டர் வைத்து துருவி துருவி சோதனை செய்தனர்.


மயிரிழையில் உயிர் தப்பிய போலீஸ் கமிஷனர்

திருப்பூர், அவிநாசி ரோடு, பெரியார் காலனியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையை எதிர்பார்த்து அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாநகர் மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன், எம்.எல்.ஏ விஜயகுமார் ஆகியோருடன்  மாநகர் போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உயரதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர்.

 

அப்போது இவர்கள் நின்றுகொண்டிருந்த பகுதிக்கு ஒரு போலீஸ் வாகனம் வருவதை பார்த்ததும் அங்கிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அந்த வாகனத்தை மெதுவாக வர சைகை செய்தார்.   போலீசாரை ஏற்றிவந்த  வாகனம் அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் இருந்ததை கவனித்தும், மெதுவாக வராமல்  கூட்டத்தையே பார்க்காதது போல் மிகவேகமாக வந்து அவர்களை கடந்து சென்றது.

 

அந்தநேரத்தில், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தனக்கு கீழ் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் அங்கு செய்யப்பட்டு இருந்த பாதுகாப்பு குறித்து கேட்டுக்கொண்டிருந்தார். வேகமாக வந்த வாகனத்திற்கும் போலீஸ் கமிஷனருக்கு அரை அடி தூரமே இருந்தது. நல்லவேளை போலீஸ் கமிஷனர் அந்தநேரத்தில் சாதாரணமாக திரும்பி இருந்தாலே அந்த போலீஸ் வாகனம் மோதி இருக்கும். அப்போது போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மயிரிழையில் உயிர் தப்பினார்.

 

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த   போலீஸ்  அதிகாரி  ஒருவா் மைக்கில் தொடர்புகொண்டு அந்த போலீஸ் வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவரை கடுமையாக எச்சரித்தார். பின்னர் நாளை காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அவர் சொல்லி உத்தரவிட்டார். அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.  இந்த சம்பவம் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் குலைநடுங்கச்  செய்தது.


“வாழ்த்தும் உதடுகளும், உதவும் கரங்களும், வணங்கும் இதயமும் இருந்தால் போதுமே”
அருட்கவி…


Leave a Reply

Right Menu Icon