--- --:--:-- --

5 பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்

1.1

5 பெண்களை திருமணம் செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதல் மனைவி புகார் அளித்துள்ளார்.

 

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம், சென்னை என்னுரை சேர்ந்த பானுரேகா என்பவருக்கும் அவரது வீட்டு அருகே வசித்து வந்த காவலர் பிரபாகரன் என்பவருக்கும் 1994 ஆம் ஆண்டு திருவற்றியூர் பதிவாளர் அலுவலகத்தில் காதல் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் பிரபாகரனின் பெற்றோருக்கு பயந்து பானுரேகா பெங்களூருக்கு திரும்பிச் சென்ற நிலையில், 2017 ஆம் ஆண்டு பிரபாகரன் அவரை மீண்டும் சென்னை அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பிறகு, பிற பெண்களுடன் நட்பு இருந்ததை அறிந்து தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க சென்ற போது பிரபாகரன் மீது ஏற்கனவே 5 பெண்கள் புகார் அளித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பானுரேகா காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபாகரன் மீது புகார் அளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon