வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம்..!
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் மேற்கொள்ள இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கடந்த வாரம் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டிருந்தார்.
அதன்படி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்துகொள்ள தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மேலும் டிசம்பர் 12, 13 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






