--- --:--:-- --

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு கண்டிப்பாக நடைபெறும்..!

5

டப்பு கல்வியாண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்சி நிர்வாகிகள் குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

கொரொனா காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழக்கமாக நடைபெறும் சிபிஎஸ்சி தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே நிலவி வந்தது.

 

இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎஸ்சி நிர்வாகிகள் குழு செயலாளர்கள் நடப்பு கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என்று தெரிவித்தார்.

 

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருவதால் தேர்வு கட்டாயமாக நடைபெறும் என்றும் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார்.

Leave a Reply

Right Menu Icon