--- --:--:-- --

தை அமாவாசையை முன்னிட்டு மதுரை – ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.!

8.1

ண்டி எண் 06091 மதுரை – இராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து புதன்கிழமை (10.02.2021) இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு இராமேஸ்வரம் சென்று சேரும்.

 

மற்றொரு சிறப்பு ரயில் வண்டி எண் 06097 மதுரை இராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் மதுரையிலிருந்து வியாழக்கிழமை (11.02.2021) அன்று காலை 06.45 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு இராமேஸ்வரம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06092 இராமேஸ்வரம் – மதுரை விரைவு சிறப்பு ரயில் இராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (11.02.2021) காலை 10.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.15 மணிக்கு மதுரை வந்து சேரும்.

 

மற்றொரு சிறப்பு ரயிலான வண்டி எண் 06098 இராமேஸ்வரம் – மதுரை விரைவு சிறப்பு ரயில் இராமேஸ்வரத்தில் இருந்து வியாழக்கிழமை (11.02.2021) மாலை 04.30 மணிக்கு புறப்பட்டு இரவு 07.30 மணிக்கு மதுரை வந்து சேரும்.

 

இந்த ரயில்கள் கீழ் மதுரை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்.

Leave a Reply

Right Menu Icon