--- --:--:-- --

தென் மண்டல அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் 2020 போட்டிகள்! அசத்திய மாணவர்கள் !!!

4

வரும் மே மாதம் தாய்லாந்து மற்றும் மலேசிய நாடுகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் நாடு முழுவதும் தேர்வு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள எஸ்.எஸ்.வி.எம்.பள்ளியில் தெ ன் மண்டல அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் 2020 போட்டிகள் நடைபெற்றது.

ஆனந்தம் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையம் மற்றும் யோகா கல்ச்சுரல் சொசைட்டியுடன் இணைந்து நடத்திய இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஐந்து வயது முதல் எழுபது வயதானவர்கள் என 300 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர்.

ஆனந்தம் யோகா மற்றும் இயற்கை மையத்தின் நிறுவனரும்,பிரபல யோகா பயிற்சியாளரான நல்லுசாமி முன்னிலையில் நடைபெற்ற இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்கள் மலேசிய மற்றும் தாய்லாந்து போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்படுவார்கள் என பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.போட்டிக்கான ஏற்பாடுகளை யோகா பயிற்சியாளர்கள் ஜெயராமன்,ராதாமணி,சவீதா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

Leave a Reply

Right Menu Icon