--- --:--:-- --

சோனியா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் : மம்தா, கெஜ்ரிவால், மாயாவதியுடன் சிவசேனாவும் புறக்கணிப்பு!!

சோனியா தலைமையிலான அனைத்துக் கட்சி கூட்டம் : மம்தா, கெஜ்ரிவால், மாயாவதியுடன் சிவசேனாவும் புறக்கணிப்பு!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மம்தா , மாயாவதி, கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்த நிலையில், காங்கிரசின் புதிய கூட்டாளியான சிவசேனாவும் புறக்கணித்துள்ளது.

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இந்நிலையில் இந்தச் சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவது குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

 

இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் சோனியா அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், சோனியாவின் அழைப்பு விடுத்த அடுத்த நிமிடமே, கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அறிவித்தார். அத்துடன் குடியுரிமை சட்ட விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக காங்கிரசையும், கம்யூனிஸ்ட் கட்சியினரையும் மம்தா கடுமையாக விமர்சனமும் செய்திருந்தார்.கடந்த வாரம் தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மம்தா ஆதரவு தரவில்லை. ஆனால் அன்றைய தினம் மே.வங்கத்தில் காங்கிரசாரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் வன்முறையில் ஈடுபட்டதை குற்றம் சாட்டியே மம்தா இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

 

இதே போல், ராஜஸ்தானில் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை காங்கிரஸ் கட்சி அபகரித்த கோபத்தில் பகுஜன் கட்சித் தலைவர் மாயாவதியும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை எனக் கூறி விட்டார்.

 

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலோ, டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரசுடன் கைகோர்க்க விரும்பாமல் கூட்டத்தை புறக்கணிக்க, காங்கிரசின் புதிய கூட்டாளியான சிவசேனாவும் கூட்டத்தில் பங்கேற்காதது, சோனியாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

 

இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா தலைமையில் கூடியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேசிய வாத காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம்,இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon