--- --:--:-- --

மணிப்பூர் மக்கள் அமைதி காக்க சோனியா காந்தி வேண்டுகோள்..!

4

ணிப்பூரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நிகழ்த்த வன்முறை தேசத்திற்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டது என சோனியா காந்தி வேதனை தெரிவித்துள்ளார்.

 

ட்விட்டரில் காணொளிகளை வெளியிட்டுள்ள அவர் வன்முறையால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

வலுக்கட்டாயமாக அங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்படுவது மிகுந்த வேதனைக்குரியது என்றும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அந்த நிகழ்வை வன்முறை ஒட்டுமொத்த தேசத்தையும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

 

இந்த சூழலில் இருந்து மணிப்பூர் மக்கள் விரைவாக மீண்டும் வருவார்கள் என தான் நம்புவதாகவும் வன்முறை நிகழாமல் இருக்க அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Right Menu Icon