தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்த்த கனமழை..!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. திருச்சி மாநகர் பகுதிகளான சத்திரம் பேருந்து நிலையம், மலைக்கோட்டை, உடையூர், பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இரவு கனமழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதே போல் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல இடங்களிலும் இரவில் மழை பெய்தது.
சில நிமிடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் அவர் இடைத்தனர். கரூர் மாவட்டம் குளித்தலை, மேட்டுக்குலியூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






