--- --:--:-- --

சொத்து பிரச்சினையால் தாய் மீது தாக்குதல் நடத்திய மகன்..!

11

திருப்பத்தூர் அருகே சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி தராத ஆத்திரத்தில் தாய் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் ராணுவ வீரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த அப்பாவு – தனலட்சுமி தம்பதி. இவர்களது மூத்த மகன் தாயை பராமரித்து வரும் நிலையில் இளைய மகனும் முன்னாள் ராணுவ வீரருமான லோகேஸ்வரன் அப்பாவை கவனித்து வந்துள்ளான்.

 

இந்நிலையில் மகேஸ்வரன் தனது தாயின் பெயரில் உள்ள சொத்துக்களை தன் பெயரில் எழுதி வைக்குமாறு கூறி நெஞ்சில் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தனலட்சுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த லோகேஸ்வரன் மீது காவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Right Menu Icon