--- --:--:-- --

பேய்கள் தன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக ஒருவர் புகார்..!

7

பேய்கள் தன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது. குஜராத்திலுள்ள பாஞ்ச்மகால் மாவட்டம் ஜம்புகோட்டா தாலுகாவை சேர்ந்த ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றுள்ளார்.

 

மிகவும் பதற்றத்துடன் காணப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது அவர் தோட்டத்தில் தன்னை வேலை செய்யவிடாமல் இரண்டு பேய்கள் தொடர்ந்து தொந்தரவு கொடுப்பதாகவும் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார் .

 

மேலும் தனக்கு மிரட்டல் விடுக்கும் பேய் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். அதைக்கேட்ட போலீசார் அவர் நிலைமையை அறிந்துகொண்டு புகாரை பதிவு செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

 

பின் அவருடைய குடும்பத்தாரை அழைத்து விசாரித்ததில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் பத்து நாட்களாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் தெரியவந்தது.

 

குடும்பத்தாருக்கு அறிவுரை கூறி அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் போலீசார் பொறுமையுடன் கையாண்ட விதம் குறித்து பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon