--- --:--:-- --

தாயின் இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் வீடியோ காலில் கண்ணீர் விட்டு அழுத ராணுவ வீரர்!

2

ஊரடங்கு நேரத்தால் தாயின் இறுதி சடங்கிற்கு கூட வர முடியாத ராணுவ வீரர் வீடியோ கால் மூலம் தாயின் உடலை கண்டு கதறி அழுத காட்சி உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அழகா கவுண்டன் ஊரை சேர்ந்த தங்கவேலு, மாது தம்பதியின் மகன் சக்திவேல். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

 

கடந்த சில தினங்களாக சக்திவேலின் தாயாருக்கு உடல்நலம் சரியாமல் இருந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். இறந்த செய்தி கேட்டு துடித்துப் போன ராணுவ வீரர் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலையில் தனது தாயின் சடலத்தை கண்டு கதறி அழுதுள்ளார்.

 

இந்த காட்சி அங்கு கூடியிருந்த உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் மண்ணுக்கான சேவைக்காக ராஜஸ்தானில் இருக்கும் சக்திவேல் பெற்ற தாயின் இறுதிச் சடங்கில் முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது ஊரடங்கு.

Leave a Reply

Right Menu Icon