மீண்டும் முடங்கிய சமூக வலைத்தளம்..!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் நேற்று மீண்டும் முடங்கின. கடந்த அக்டோபர் மாதம் 6 மணி நேரம் பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை முடங்கியதற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியது.
52 ஆயிரம் கோடி ரூபாய் வரை பேஸ்புக் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நவம்பர் 19ஆம் நாளான நேற்றும் ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்கள் ஒரு மணி நேரம் முடங்கியது.
இதனால் சமூக ஊடகங்களை தினமும் பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவோர் மட்டுமின்றி அத்தியாவசிய தேவைக்கு பயன் படுத்துவோர் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டனர்.






