--- --:--:-- --

சமூக ஊடகங்கள்தான் என்னை எரிச்சல்படுத்துகின்றன: கொதித்த விஜய் தேவரகொண்டா!

8

Vijay Devarakonda New Arjun Reddy Movie Latest Stylish ULTRA HD Photos Stills Images

என்னை எரிச்சலடைய வைப்பது சமூக ஊடகங்கள் தான் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார். இந்திய சினிமா நடிகர்கள் கலந்துகொண்ட சினிமா ரவுண்ட் டேபிள் பேட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய்தேவரகொண்டா, விஜய்சேதுபதி, ஆலியா பட் மற்றும் பார்வதி கலந்துகொண்டனர்.

 

தங்களுக்குள்ள சினிமா புரிதல் குறித்தும், சினிமாவின் தற்போதைய நிலை குறித்து கருத்துக்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இதில் பேசிய மலையாள நடிகை பார்வதி அர்ஜுன் ரெட்டி மற்றும் ஆங்கிலத்தில் ஜோக்கர் படங்களைப் பற்றி பேசினார்.

 

அர்ஜுன் படத்தின் படம் பற்றி கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார். பெண்வெறுப்பை கொண்டாடும் படமாக அர்ஜுன்ரெட்டி இருக்கிறது என்று வெளிப்படையாகவே பேசினார். ஆங்கிலப் படமான ஜோக்கர் திரைப்படத்தில் நடிகர் கொலை செய்தாலும் அந்த கதாபாத்திரத்தை பின் தொடர வேண்டும் என்றோ பாராட்ட வேண்டும் என்று தோன்றவில்லை.

 

அதேவேளையில் அர்ஜுன் ரெட்டியில் காதலர்களிடையே கன்னத்தில் அறைந்து கொள்வதை காட்டுகிறார்கள். அதற்கு யூடியூபில் சென்று பார்த்தால் மக்கள் கும்பல் கும்பலாக ஆதரவாக கமண்ட் செய்திருக்கிறார்கள் . அப்படி என்றால் நீங்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.

 

இது இணையத்தில் ஹிட்டானது. இணையவாசிகள் பலரும் பார்வதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் விஜய்தேவரகொண்டாவை கடுமையாக விமர்சித்தும், அந்த படத்தை கடுமையாக திட்டியும் விமர்சித்து வந்தனர்.

 

இதனால் கடுப்பான விஜய் தேவர்கொண்டா இனியும் அமைதியாக இருக்க முடியாது இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன், மனதிற்குள்ளேயே வைத்திருந்தால் அது கட்டியாக மாறி விடுவோம் என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது நடிகை பார்வதியை எனக்கு பிடிக்கும்.

 

அவரது நடிப்பை மதிக்கிறேன். அவரது கேள்வி பற்றி எனக்கு கவலை இல்லை. அதை நான் புரிந்து கொள்கிறேன். படம் பற்றிய சந்தேகத்தின் பலனை மக்களிடம் விட்டுவிடுகிறேன். அவரின் கேள்விகளுக்கு பின்னால் உண்மையான கோவமும், நோக்கமும் இருப்பதை உணருகிறேன்.

 

ஆனால் என்னை எரிச்சலடைய வைத்தது சமூக ஊடகங்கள் தான். என்ன பேசினோம் என்பது புரியாமலேயே இவர்கள் எதையோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றி இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருப்பதை நான் விரும்பவில்லை. அது என் பிரச்சனை. படம், பேட்டி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை என்று தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Right Menu Icon