குப்பை கொட்டினால் கை வெட்டப்படும்!ஆட்சியர் மெகராஜ் ஆவேசம்
வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களின் கைகளை வெட்ட சொல்லி இருப்பதாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆவேசமாக பேசியுள்ளார். பல இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதால் தமது வாட்ஸ்அப் எண்ணிற்கு புகைப்படத்துடன் பொதுமக்கள் அனுப்பி இருப்பதாக கூறினார்.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை திட்டி செலவு செய்து தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் இருப்பினும் அதே இடங்களில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

இதனால் குப்பைகளை கொட்டுபவர்களின் கைகளை வெட்ட சொல்லி இருப்பதாகவும், குப்பையை கொட்டுபவர்களுக்கு கைகள் தேவையில்லை என்றும் ஆவேசமாக பேசினார்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் எச்சில் துப்புவது போல் சிங்கப்பூர் பேருந்து நிலையத்திலேயோ நாட்டிலிருக்கும் விமான நிலையத்திலேயோ பொதுமக்கள் எச்சில் துப்புவார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே நாமாக திருந்தும் வரையில் இதற்கு தீர்வே கிடையாது எனவும் எல்லோரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.





