--- --:--:-- --

ஓசூரில் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்!

7

ஓசூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இரவு நேரத்தில் கடத்தப்படவிருந்த தடைசெய்யப்பட்ட மீன்களை அதிகாரிகள் பிடித்து அழித்தனர்.

 

மத்திய, மாநில அரசுகளால் தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்கன் வகை கெளுத்தி மீன்கள் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொட்டிகளில் இந்த மீன்கள் வளர்க்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

 

இந்த மீன்கள் ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இரவு நேரத்தில் கடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே அங்கு உள்ள பத்தளபள்ளியில் இரவு நேரத்தில் இந்த மீன்கள் லாரியில் கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து அங்கு சென்ற வருவாய் துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் லாரியில் இருந்த தடைசெய்யப்பட்ட மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை குழி தோண்டி புதைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon