எஜமானனை கடிக்க வந்த பாம்பை, கடித்து குதறிய வளர்ப்பு நாய்கள்
கோவை அருகே தன்னை வளர்த்தவரை கடிக்க வந்த கண்ணாடி விரியன் பாம்பை மூன்று நாய்கள் இணைந்து கடித்து குதறின. ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு மூன்று வளர்ப்பு நாய்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அருகில் உள்ள வயல் வெளியிலிருந்து கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று ராமலிங்கத்தின் அருகே வந்து கடிக்க முயன்றுள்ளது. இதனை பார்த்த மூன்று நாய்களும் அந்த பாம்பை ஆக்ரோஷத்தோடு தாக்கி அருகில் உள்ள வயல் வெளியில் எடுத்துச் சென்று கடித்து குதறின.





