--- --:--:-- --

வானதியுடன் விவாதிக்க கமல் தயாரா? அமைச்சர் ஸ்மிருதி சவால்!

Smirhti 2

கோவை தெற்கு தொகுதி மக்களின் பிரச்சனை, ஆட்சி நிர்வாகம், கொள்கை முடிவுகள் குறித்து பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசனுடன், ம. நீ. ம. தலைவர் கமலஹாசன் விவாதித்த தயாரா என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.

 

கமல்ஹாசன் போட்டியிடுவதால், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இங்கு பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அதன் முடிவில், வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சாமாஜில் நடந்த ஹோலி கொண்டாத்திற்கு சென்ற அமைச்சர் ஸ்மிருதி, அங்கு குஜராத் மக்களுடன் நடனமாடினார். உடன் வானதியும் நடனமாடினார்.

https://twitter.com/i/status/1375736410511040514

பின்னர் அமைச்சர் ஸ்மிருதி இராணி பேசியதாவது: வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல வரும் ஏப்ரல் 6 தேதி வாக்களிப்பதை ஒரு புனித செயலாக எண்ணி பாஜக விற்கு வாக்களிக்க வேண்டும். அதுவே ஏழை மக்களின் பொருளாதாரம் வளர்ச்சியை உயர்த்தும், வீட்டிற்கு வரும் மகா லட்சுமி தாமரையில் அமர்ந்து தான் வரும், டார்ச் லைட்டில் வராது.

 

தற்போது டார்ச் லைட்டுடன் சுற்றி வருபவர் (கமல்ஹாசன்), பாஜக வேட்பாளரான வானதியுடன் மக்கள் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல், அதற்கான தீர்வு வழங்குதல், ஆட்சி நிர்வாகம், அரசு கொள்கை முடிவுகள் குறித்து விவாதிக்க வேண்டும். அதை வைத்தே பால், தண்ணீர் இரண்டையும் எளிதாக பிரித்து விடலாம்.

 

கொரோனா காலத்தில் மத்திய அரசு மக்களுக்கு சிறப்பான பணிகளை ஆற்றியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நிலைமை ஆகியிருக்கும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 80 கோடி மக்களுக்கு இலவச ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டது. 26 கோடி மகளிருக்கு 3 ஆயிரம் கோடி பணம் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

 

மோடி ஆட்சியில் மத்திய அரசால் 10 கோடி கழிப்பறைகளும், அதில் தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் முக்கியதுவத்தை தமிழகத்தில் உள்ள ஏழை பெண்கள் மட்டுமே உணர்வார்கள். 2 ஆண்டுகளில் 10 கோடி விவசாயிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 50 லட்சம் விவசாயிகள் தமிழக விவசாயிகள். இவ்வாறு ஸ்மிருதி இராணி பேசினார்.

Leave a Reply

Right Menu Icon